என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நிபா காய்ச்சல்
நீங்கள் தேடியது "நிபா காய்ச்சல்"
நிபா காய்ச்சல் பாதிப்பினால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டதில் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் 12-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. #Nipahvirus
திருவனந்தபுரம் :
கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை, நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பதை 12-ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், வரும் 12-ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின்னர் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிபா காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வரும் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
நோய் அறிகுறிகளுடன் இருந்த 371 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நிபா பாதிப்பு இல்லை சோதனையின் முடிவில் தெரிவந்துள்ளது. இதே போன்ற முடிவுகளையே, நோய் அறிகுறிகளுடன் மீதம் உள்ள நபர்களிடம் இருந்தும் நாங்கள் எதிர்பார்கின்றோம்.
நிபா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. மேலும், நோய் பாதிப்பினால் மாநிலத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Nipahvirus

நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில் அந்த பொறுப்பை மருத்துவர் ஒருவர் ஏற்றுக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. #Nipahvirus
திருவனந்தபுரம் :
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 18 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிகப்பட்டு இறந்தவர்களின் உடலின் அருகில் சென்றால் வைரஸ் தங்களுக்கும் பரவிடும் எனும் அச்சத்தில் இறந்தவர்களின் உடலை பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்.எஸ்.கோபகுமார் என்பவர் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த 12 பேரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளார். அதன்படி, 3 உடல்களுக்கு அவர் ஏற்கெனவே ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 17 வயது சிறுவனுக்கு ஈமச்சடங்கு செய்த பின்னர் பேசிய மருத்துவர் ஆர்.எஸ்.கோபகுமார், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்யும் போது அவர்களின் உறவினர்களில் ஒருவரும் அருகே இல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ஆனால், நான் எதையும் யோசிக்காமல் அந்த சிறுவனுக்கு இந்துமத முறைப்படி ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்தேன், இது எனது கடமை” என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, “எபோலாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை நான் பின்பற்றினேன். இறந்தவர்களின் உடலை காற்றுபுகாத படி சுற்றி பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, 10 அடி குழி வெட்டி அதில் 5 கிலோ எடையுடைய பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.
மருத்துவர் ஆர்.எஸ்.கோபகுமாரின் இந்த தன்னலமில்லாத நடவடிக்கை பற்றி அம்மாநில சுகாதார மந்திரி ஷைலஜா சட்டசபையில் நேற்று புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. #Nipahvirus

கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம் என அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. #Nipahvirus
கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம்
Deceased jawan's samples test negative for Nipah virus
Nipah virus, நிபா காய்ச்சல்
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ராணுவ தலைமையகமான வில்லியம் ஃபோர்டில் பணி புரிந்து வந்த சீனு பிரசாத் (27) விடுமுறைக்காக சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்றிருந்தார்.
விடுமுறை முடிந்து கடந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய அவர் கடும் காய்ச்சலால் அவதியுற்று வந்தார். அவரை சக ராணுவ வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 20-ம் தேதி அனுமதித்தனர். ஆனால், சிக்கிச்சை பலனில்லாமல் கடந்த மாதம் 25-ம் தேதி சீனு பிரசாத் உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு நிபா காய்ச்சல் தான் காரணமாக இருக்கும் என சந்தேகித்திருந்த வேலையில், அவரது ரத்த மாதிரிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய நோய் கிருமியியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இன்று அவரது ரத்த மாதிரிகளின் முடிவு வெளியாகியுள்ளது. அதில் ராணுவ வீரர் சீனு பிரசாத் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தான் உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளது. #Nipahvirus

கொல்கத்தா :

நிபா காய்ச்சால் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் இன்று உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. #NipahVirus #Kerala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 50 டோசோஜ் மருந்துகள் வந்துள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்கப்படுமென்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. #NipahVirus #Kerala
நிபா காய்ச்சால் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #NipahVirus #Kerala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 50 டோசோஜ் மருந்துகள் வந்துள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்கப்படுமென்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாணி (62) என்ற பெண் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலமே பரவியது என்று கூறப்பட்டது. இதற்கிடையில் முதல் கட்ட ஆய்வில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்று தெரிய வந்துள்ளது. #NipahVirus #Kerala
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளதால் கோவை, நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோழிக்கோடு, மலப்புரம் நீலம்பூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் தமிழக மாவட்டமான நீலகிரி, கோவை மாவட்டத்தை யொட்டியுள்ளது. இதனால் நிபா காய்ச்சல் பீதி இங்கு அதிகம் உள்ளது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி, தாளூர், நாடுகாணி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் வேலை சம்பந்தமாக கேரளா சென்று வருகிறார்கள். இதேபோன்று கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழக பகுதியில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து கக்கநல்லா, பந்தலூர், சேரம்பாடி, தொரப்பள்ளி, கூடலூர் ஆகிய 5 வழிப்பாதை உள்ளது. இங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.
மேலும் சுற்றுலா தலங்கள், ஆதிவாசி கிராமங்களில் வாகனம் மூலம் விழிப்புர்ணவு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதிலுள்ள சுகாதார நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் இந்த நோய்குறித்து எந்த அறிகுறிகளும் இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி பழ வியாபாரிகளிடம் பறவை கடித்த பழங்கள், அழுகிய பழங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி மற்றும் பொள்ளாச்சியிலும் சுகாதார துறையினர் முகாமிட்டு வாகன பரிசோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் இதுவரை இந்த காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.

×

X